news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு
tv

Also Watch

tv

Read this

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு

ஈரான்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கமேனி

ஈரான், ஈராக்கில் ஜூலை 4 முதல் 9 வரை இறுதிச்சடங்கு :

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

அவரது இறுதிச்சடங்குகள் ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜூலை 9-ம் தேதி கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக தலைவர் நிதின் நபின், முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோருக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் :

(Courtesy : Gofundme)

அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர் உயிரிழந்தார். ஆந்திராவை சேர்ந்த இந்திய தொழில்நுட்ப வல்லுநரும், மாணவருமான 33 வயதான வெங்கடேஷ் டொப்பலபுடி, கடந்த சனிக்கிழமை மதியம் ஹூஸ்டனிலிருந்து நெப்ராஸ்கா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.

கார் ஆற்று நீரில் மூழ்குவதைக் கண்டவர்கள் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் அளித்தனர். வெள்ளம் அதிகமாக இருந்ததால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பல்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு மறுநாள் உடல் மீட்கப்பட்டது. ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்ததோடு, உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Related Link
பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்தது குறித்து டிரம்ப் பதிவு

பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்தது குறித்து டிரம்ப் பதிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அறிவாலயத்தின் டிஜிட்டல் ஆபரேசன், திமுகவின் 'ஆகஸ்ட் அறிக்கை' பிளான்

2
11 mins agoshare
திமுகவின் 'ஆகஸ்ட் அறிக்கை' பிளான்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau