Also Watch
Read this
By: Manigandan Raja

IRGC-யின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தல் :
ஹோர்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் தரை தட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், அரசு கூறிய வழித்தடத்தை பின்பற்றாமல் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் தரைதட்டி சிக்கியதாகவும், அது எந்த நாட்டை சேர்ந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும், ஈரானின் புரட்சிகர காவல் படை வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீர் எச்சரிக்கை :

(Coutesy : Reuters)
தேவைப்பட்டால் ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசியா பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில், ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுக்க இஸ்ரேல் தனித்து செயல்படும் என நெதன்யாகு தெரிவித்தார். மேலும், ஈரானின் அணுகுண்டுகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.
ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடக்கிறது :

ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 3 இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தாலும், அந்நாட்டுனான உறவு சுமூகமாகவே உள்ளதாகவும் கூறினார்.
போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையும் முன்னேற்றப்பாதையில் உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே முன்பு இருந்த பதற்றமான சூழல் தற்போது இல்லை எனவும் தெரிவித்தார். அணு ஆயுதங்களற்ற ஈரானை உருவாக்கும் முயற்சியே தற்போதைய குறிக்கோளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.