news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்தது குறித்து டிரம்ப் பதிவு
tv

Also Watch

tv

Read this

பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்தது குறித்து டிரம்ப் பதிவு

அதிபர் டிரம்ப்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

நீதிமன்ற தீர்ப்பு அமெரிக்காவுக்கு மிகவும் மோசமான விஷயம் :

பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இது அமெரிக்காவிற்கு மிகவும் மோசமான விஷயம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதின் மூலம் இதை எளிதாக மாற்றியமைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எதுவும் தேவையில்லை எனவும், நாட்டிற்கு அதிக செலவை ஏற்படுத்துவதும், அநீதியானதுமான பிறப்புரிமை குடியுரிமை முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை நாடாளுமன்றம் இன்றே தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை உண்டு :

பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்டத்துக்கு எதிராக அதிபர் டிரம்ப் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்போர், தற்காலிக விசாவில் இருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என கடந்தாண்டு பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதில், டிரம்பின் உத்தரவுக்கு எதிராகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதை எதிர்தது அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.

நாள்தோறும் 10 சவரன் தங்கத்தை வெளியேற்றும் எரிமலை :

அண்டார்டிகாவின் Mount Erebus எரிமலை நாள்தோறும் சுமார் 10 சவரன் தங்கத்தை காற்றில் வெளியேற்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ஆண்டிற்கு தோராயமாக 18 கோடியே 90 லட்சம் ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத் துகள்கள் எரிமலையில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பரவி, அண்டார்டிகா பனிப்பாறைகளில் படிவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Link
இரட்டை நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை

இரட்டை நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமணம் குறித்து மனம் திறந்த 'கட்டா குஸ்தி 2' ஹீரோயின்

2
47 mins agoshare
ஐஸ்வர்யா லட்சுமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau