Also Watch
Read this
By: Manigandan Raja

போர் பதற்றம் தணிந்ததால் விமான நிறுவனங்கள் முடிவு :
எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் குறைக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகளின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்த இந்திய விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் தணிந்து வருவதாலும், வான் வெளி பயணக்கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவதாலும் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளன.
மழை காரணமாக பள்ளிப் பேருந்தின் மீது சாய்ந்த மரம் :

மும்பையில் மழைக் காரணமாக பள்ளிப் பேருந்தின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது மாணவர் உயிரிழந்தான். இந்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொடர்பான தகராறு :
மகாராஷ்டிராவில் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொடர்பான தகராறில் மாணவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் பள்ளியில், முதல்வர் அறையில் மாணவர், ஆசிரியர் மற்றும் முதல்வர் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆத்திரமடைந்த மாணவர் அருகில் இருந்த ஆசிரியரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி பலி :

உத்தர பிரதேசத்தில் சரயு நதியில் குளிக்கச் சென்ற 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், மாயமான 2 சிறுமிகளை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். அயோத்தி மாவட்டம் சனஹா கிராமத்தில் உள்ள நதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 5 பேர் குளிக்கச் சென்றனர். இதில், ஒரு சிறுமி ஆழமாக பகுதிக்கு சென்று தத்தளிக்கவே, அவரை காப்பாற்ற சென்ற மற்றவர்களும் நீரில் மூழ்கினர். இதில், 3 பெண்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.