Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து :
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி கண்டிப்பாக அறிமுகமாக வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை இங்கிலாந்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் சூர்யவன்ஷி அறிமுகமாவது குறித்து பேசிய கவாஸ்கர், ஐபிஎல் தொடரில் ரன் மழை பொழிந்த அவர், 'லிஸ்ட்-ஏ' போட்டியில் 11 பந்தில் அரைசதம் விளாசி, நல்ல 'பார்மில்' உள்ளார். இவரை போன்ற திறமையான வீரர்களை புறக்கணிக்க முடியாது என சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.
மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த ஹர்திக் :

மும்பையில் குடியிருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தொடர்ந்து பயிற்சி செய்வதற்காக பெங்களூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். காயத்திலிருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டிய, மறுவாழ்வுப் பயிற்சிகளைத் தொடர்வதாலும், தனது டி20, ஓடிஐ போட்டிகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதாலும், பெங்களூருவுக்கு குடிபெயர்ந்ததாக தெரிகிறது.
இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி :

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளையாடுவது உறுதியாகி உள்ளது. அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிரான டி-20 தொடரை 2-க்கு 0 என இழந்தது. இந்த போட்டிகளில் காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி விளையாடவில்லை. இது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
அடுத்து, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி, 5 டி-20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுடன் வருண் சக்கரவர்த்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவது உறுதியாகி உள்ளது.