Also Watch
Read this
By: Manigandan Raja

நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் :
ஹிமாச்சல பிரதேசத்தின் லாஹுல் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ஜிஸ்பா அருகே மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளம் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்திவைத்தனர்.
2 மாடி குடியிருப்பு, மாட்டு தொழுவத்தில் பயங்கர தீவிபத்து :
ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாராவின் ராஜ்வார் பகுதியில் உள்ள க்ரம்ஹூரா ((Krumhoora)) பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலில் 2 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் அருகிலிருந்த மாட்டு தொழுவங்களுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம் :

கேரளாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 ஆயிரம் கடன் செயலிகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மாநிலத்தில் இணையதள குற்றங்கள் பரவலாக உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் :

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். அம்பாலா மாவட்டம் தன்யோரா கிராமத்தில் தந்தையுடன் வயலுக்கு சென்றிருந்த 4 வயதான நிர்வைர் சிங், அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். 19 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புப் படையினர் சிறுவனின் உடலை மீட்டனர்.