Also Watch
Read this
By: Manigandan Raja

ரசிகர்களிடம் தலை வணங்கி மன்னிப்பு கோரிய ஜப்பான் அணி :
ஃபிஃபா உலகக்கோப்பை கனவு தகர்ந்த நிலையில், ஜப்பான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹாஜிமே மொரியாசு மற்றும் வீரர்களும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரும் விதமாக தலை வணங்கினர். ஃபிஃபா உலகக் கோப்பையின் 'ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பிரேசிலிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து ஜப்பான் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேப்ரியல் மார்டினெல்லி வெற்றிக்கான கோலை அடித்தார்.
இதையடுத்து ஜப்பானின் உலகக் கோப்பை பயணம் மனதை உலுக்கும் வகையில் முடிவுக்கு வந்தது. தோல்வியிலும் அவர்கள் காட்டிய ஒழுக்கமும், விளையாட்டு நற்பண்பும் உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் மற்றும் அவரின் தந்தை மீது வழக்கு :

(Coutesy:PTI)
மத்திய பிரதேசத்தில் வீட்டு சமையல்காரரை தாக்கியதாக கூறி கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் மற்றும் அவரின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சஷாங் சிங் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி சைலேஷ் சிங் போபாலில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் தோமர் என்பவர் அண்மையில் சமையல்காரராக பணிக்கு சேர்ந்துள்ளார்.
வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவர் சமைத்த உணவு தரம் குறைந்து இருந்ததாக கூறி, இருவரும் பிரச்னை செய்துள்ளனர். மேலும் அவரை தடியால் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ :

(Coutesy: Getty images)
20வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜப்பானில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் பேட்மிண்டன், டென்னிஸ், குத்துச்சண்டை உள்பட பல்வேறு விளையாட்டுகள் நடைபெறும் நிலையில் டி20 கிரிகெட்டில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷிபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.