Also Watch
Read this
By: Manigandan Raja

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் :
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தலா மோட் ((Tala Modh)) அருகிலுள்ள ஆரவல்லி ரிசார்ட்டில் நடந்த இந்த சம்பவத்தில் கழிவுநீர் தொட்டியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது கட்டுமானத்தில் இருந்த ஒரு தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானின் அத்துமீறல் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் :

(Coutesy : ANI)
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..! பாகிஸ்தானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் இது பிராந்திய அமைதியை அச்சுறுத்தும் செயல் என்றும் வன்மையாக கண்டித்துள்ளது.
அதேசமயம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தமது அறிக்கையில் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
OBC இடஒதுக்கீடு சட்டங்களை திருத்தும் 2 மசோதக்கள் நிறைவேற்றம் :

மேற்கு வங்கத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 17 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்து இரண்டு புதிய மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம், முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் சேர்க்கப்பட்ட முஸ்லிம் சமூகங்கள் உள்ளிட்ட 113 பிரிவுகள் புதிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, 2010 க்கு முந்தைய 66 சமூகங்களுக்கு மட்டும் 7 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்களுக்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக 17 உறுப்பினர்களும் வாக்களித்தனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மீண்டும் செயல்படும் என்றும் கூறியுள்ளது.