news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அருணாச்சலில் சீன ராணுவம் நுழைந்து முகாம் அமைப்பு..?
tv

Also Watch

tv

Read this

அருணாச்சலில் சீன ராணுவம் நுழைந்து முகாம் அமைப்பு..?

அருணாச்சல பிரதேசம்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய ராணுவம்

முற்றிலும் ஆதாரமற்ற தகவல் - இந்திய ராணுவம் விளக்கம் :

அருணாச்சல பிரதேசத்தில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்துள்ளதாக வேகமாக பரவி வரும் தகவலை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி ((Upper Subansiri)) மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், எல்லைப் பகுதிகளில் சீனப் படைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக
கூறி காவல் அதிகாரிகளிடம் மனு அளித்ததை தொடர்ந்து இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த தகவல் முழுக்க முழுக்க தவறான மற்றும் ஆதாரமற்றது என்பதை இந்திய ராணுவம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.  

அனந்தபுரத்தில் அமையும் ராக்கெட் எரிபொருள் ஆலை :

ஆந்திரா அரசு ஒதுக்கியுள்ளது. அனந்தபூர் மாவட்டம், திம்மசமுத்திரத்தில் உள்ள தொழிற்பூங்காவில் ராக்கெட் எரிபொருள் பதப்படுத்தும் ஆலையை அமைப்பதற்காக SpaceFields நிறுவனத்திற்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் திட்டத்தில் சுமார் 46 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் 300 பேருக்கு உயர்நிலை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மையமாக ஆந்திராவை மாற்றும் அரசின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

கரை ஒதுங்கிய 26 அடி நீள திமிங்கலம் உயிரிழப்பு :

மும்பையின் பாந்த்ரா கடற்கரையில் ஒதுங்கிய 26 அடி நீள ஹம்ப்பேக் திமிங்கலம் தீவிர மீட்பு முயற்சிகளுக்குப் பிறகும் பரிதாபமாக உயிரிழந்தது. பாந்த்ரா கடற்கரையின் பாறைப் பகுதியில் இந்தத் திமிங்கலம் உயிருக்குப் போராடியபடி கரை ஒதுங்கிய கண்ட அதிகாரிகள் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர்.

ராட்சத கிரேன் மற்றும் படகுகளின் உதவியுடன் அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றபோது, திமிங்கிலம் எந்தவித அசைவுமின்றி நகர முடியாமல் இருந்தது. வனத்துறையினர் உள்ளூர் மீனவர்களும் அதை ஆய்வு செய்து, அது இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

Related Link
பெட்ரோல்- டீசல் விற்பனை இன்று முதல் வழக்கமான நடைமுறையே

பெட்ரோல்- டீசல் விற்பனை இன்று முதல் வழக்கமான நடைமுறையே

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புவித்தட்டுகள் இணையும் எல்லை, வெனிசுலா சந்தித்த நிலநடுக்கம்

4
4 mins agoshare
வெனிசுலா சந்தித்த நிலநடுக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau