Also Watch
Read this
By: Manigandan Raja

ஹரியானா - ராஜஸ்தான் முதல்வர்கள் கையெழுத்திட்டனர் :
ஹரியானா - ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையே யமுனை நீர் திட்டம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், "ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக் காலத்தில் கிடைக்கும் உபரி நீரை வீணாக்காமல், ஹத்னி குண்ட் ((Hathni kund)) தடுப்பணையிலிருந்து குழாய் வழியாக ராஜஸ்தானுக்கு கொண்டு செல்ல இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாக ஹரியானா முதல்வர் சைனி தெரிவித்தார்.
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை :
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 3 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 65 வயது முதியவருக்குப் புனே நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த மே 1-ஆம் தேதி புனே அருகே நடந்த இந்தச் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 65 வயதான பீம்ராவ் காம்ப்ளே, அச்சிறுமிக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
சிறுமியைக் காணாமல் தேடத் தொடங்கிய குடும்பத்தினர்,மாட்டுத் தொழுவத்திலிருந்து அவரது சடலத்தைக் கண்டெடுத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட பீம்ராவ் அதே நாளில் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம், இந்த வழக்கை 'அரிதிலும் அரிதான வழக்கு' என வகைப்படுத்தி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.