Also Watch
Read this
By: Manigandan Raja

யு டர்ன் அடித்த இண்டிகோ :
கடைசி நிமிடத்தில் வான்வழி மூடப்பட்டதால் டெல்லியில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டருக்கு சென்ற இண்டிகோ விமானம் நடுவழியில் யு டர்ன் அடித்து மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.
இன்று காலை புறப்பட்ட இந்த விமானம் சுமார் 7 மணி நேரம் பறந்த பின் ஆப்பிரிக்க வான்வெளியை அடைந்த து. எத்தியோப்பியாவுக்கும் எரித்ரியாவுக்கும் இடையே பறந்த போது திடீரென வான்வழி மூடப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, விமானம் யூ டர்ன் எடுத்து மீண்டும் டெல்லிக்கு வந்தது.
மேற்காசியாவில் நடக்கும் போர் காரணமாக பல நாடுகள் தங்களது வான்வழிகளை மூடிவிட்டதால் வேறு வழியின்றி இந்த விமானம் டெல்லிக்கு திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved