Also Watch
Read this
By: Manigandan Raja

வரும் 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் :
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 19-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் முன்னாள் மன்னர் மறைவுக்கு இரங்கல் :

கத்தார் முன்னாள் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கத்தார் நாட்டு மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி நேற்று மரணமடைந்தார்.
எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞர் மீது பின் சக்கரம் ஏறி இறங்கிய வீடியோ

சண்டிகரில் ரிவர்சில் வந்த மெர்சிடஸ் கார் ஒன்று இளைஞர் மீது ஏறி இறங்கிய பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகரின் செக்டார் 26 பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் இருந்து இரு இளைஞர்கள் வெளியே வந்தபோது கார் மோதியது.
நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் மீது காரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.