news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கர்நாடக அரசின் திட்டங்களை அமெரிக்காவே பின்பற்றுகிறது
tv

Also Watch

கர்நாடக அரசின் திட்டங்களை அமெரிக்காவே பின்பற்றுகிறது

கர்நாடகா காங்கிரஸ்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெருமிதம்

கர்நாடக அரசின் நலத்திட்டங்களை அமெரிக்காவே பின்பற்றுவதாக அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தல் மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆளும் குடியரசு கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அறிவித்த திட்டம், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் நகல் என்றார்.

நடிகர் சுஷாந்த் சிங்கின் பெண் மேலாளர் தற்கொலை வழக்கு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியனின் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதில், உத்தவ் தாக்கரே, அவரது மகனும் உத்தவ் சிவசேனா பிரிவு கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே, நடிகர்கள் டினோமோரியா, சூரஜ் பஞ்சோலி, நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜிம் பயிற்சியாளர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

டெல்லியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே ஜிம் டிரெய்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தவரை டூவீலரில் சென்ற 2 பேர் 15 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே அரங்கேறும் 3-வது சம்பவம் இதுவாகும்.

Related Link
முதல்வர் விஜய் பெயரில் போலி AI 'டீப் ஃபேக்'வீடியோ, ராஜஸ்தான் இளைஞர் கைது

முதல்வர் விஜய் பெயரில் போலி AI 'டீப் ஃபேக்'வீடியோ, ராஜஸ்தான் இளைஞர் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைமா விருதை வென்ற பாக்கியஸ்ரீ போர்ஸ்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved