Also Watch
Read this
By: Web Team

கேரள அரசுக்கும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் இடையே உள்ள மோதல் காரணமாக, துணை வேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்த நிலையில், இரண்டு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையில் உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
அரசு மற்றும் ஆளுநர் தரப்பில் வழங்கப்பட்ட பெயர்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து 2 வாரங்களில் தேடுதல் குழு உறுப்பினர்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், நான்கு வாரங்களுக்குள் விண்ணப்பங்களை பெற்று, மூன்று மாதங்களுக்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved