news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நாட்டின் ஆடை ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 22.86% ஆக உயர்வு
tv

Also Watch

நாட்டின் ஆடை ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 22.86% ஆக உயர்வு

வர்த்தகம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dress

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

நாட்டின் ஆடை ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 22.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2025 செப்டம்பரில் 8,810 கோடியாக இருந்த ஆடை ஏற்றுமதி, நடப்பாண்டு செப்டம்பரில் 10, 824 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 67,003 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 3.43 சதவீதம் அதிகரித்து 69,310 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகம் அதிகரித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் வழக்கில் 3 ஆண்டுகளில் 37,000 பேர் கைது

கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போதைப்பொருள் வழக்கில், 37 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 10 ஆயிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அம்மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

நகரம் மட்டுமின்றி, கிராமங்களிலும் போதைப்பொருள் வேகமாக பரவுவதாகவும், போதைப்பொருளை ஒழிக்க மாநிலங்களின் எல்லையை கடந்து, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலி

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். ஹைட்ரஜனேற்றம் செய்யும் செயல்முறையின் போது ஏற்பட்ட வெடிப்பின் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், உலையின் பாகங்கள் ஆலை வளாகத்திற்கு வெளியே சிதறி விழுந்தன.

மேலும் வாயு கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகைமூட்டங்கள் சூழந்ததால் மக்கள் கண் எரிச்சலுக்கு உள்ளாகினர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

Related Link
அடுத்தடுத்து 7 மர்ம மரணங்கள், ரூ.200 கோடி சாம்ராஜ்யம்

அடுத்தடுத்து 7 மர்ம மரணங்கள், ரூ.200 கோடி சாம்ராஜ்யம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமானி கனவை எட்டிப்பிடிக்கும் Zomato டெலிவரி ஊழியர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved