Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும்போது ஆதார், குடும்ப அட்டை ஆகியவற்றை ஆவணமாக பெற வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் கருத்துகளை கேட்டு வரும் நிலையில், என்.ஆர்.இளங்கோ, டி.எம்.செல்வகணபதி, தங்க தமிழ்ச்செல்வன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், முரசொலி ஆகியோர் அடங்கிய திமுக எம்பிக்கள் குழுவிடம் இன்று கருத்து கேட்கப்பட்டது.
இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்க வேண்டும், தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளும் ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது தமிழிலும் வழங்க வேண்டும் என் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக எம்பிக்கள் குழு தெரிவித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved