முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் விமர்சனம்
பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல்களை நடத்துவதற்கான துணிச்சல் இந்தியாவிடம் இருந்தாலும், பிரச்னைகளை தீர்ப்பதற்கான விருப்பம் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் விமர்சனம் செய்துள்ளார்.
அட்டாரி - வாகா எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
கட்சியில் இருந்து வெளியேறிய திரிணாமுல் MP, MLA-க்கள்
கட்சியில் இருந்து வெளியேறிய MP-க்கள் மற்றும் MLA-க்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி15 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
15 நாட்களுக்குள் திரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் எனவும், இல்லையெனில் கட்சியில் எப்போதும் இடமிருக்காது எனவும் எச்சரித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்
பெண் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் மோடியையும்உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
பாதுகாப்பு அளிப்பதை கடமையாகக் கொண்ட காவல் துறையினரை கண்டு பெண்களே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சாடினார்.