பாதகங்களை பட்டியலிட்டுள்ள எலான் மஸ்க்கின் க்ரோக்
- இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அனுமதிக்க விரும்பும் எலான் மஸ்க்கின் சொந்த AI சாட்பாட்டான க்ரோக், அதில் உள்ள பாதகங்களை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்கிற்கு அனுமதி பெற எலான் மஸ்க் தீவிரமாக முயன்று வருகிறார்.
- ஆனால், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அனுமதிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவரது சாட்பாடான க்ரோக்கிடம் கேட்டபோது, அது 4 முக்கிய பாதகங்களை பட்டியலிட்டதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது நகைச்சுவையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்ற பார்க் ஸ்ட்ரீட்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்ற பார்க் ஸ்ட்ரீட்டில், முதன்முறையாக பிரம்மாண்ட துர்கா பூஜைக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. பல நூற்றாண்டுகளாகத் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள இந்தப் பகுதியில், இந்த ஆண்டு துர்கா பூஜைக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தானே அருகே இனிப்புக் கடையில் எலித்தொல்லை

- மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் பிவாண்டியில் உள்ள இனிப்புக் கடையில், குலாப் ஜாமூன் பாத்திரத்தில் எலி மிதந்துக்கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. கடையில் சோதனை நடத்தி, உணவு மாதிரிகளைச் சேகரித்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிய உணவுப் பதிவு சான்றிதழ் இல்லாததால், கடையின் விற்பனைக்கு தடை விதித்துள்ளனர்.