Also Watch
Read this
By: Manigandan Raja

தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
அசாம் மாநிலம் நலபாரியில் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்ட நிலையில், தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையின போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ருஷிகொண்டா கடற்கரையில் அலையில் சிக்கிய மாணவர்கள்
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன மேலும் இரண்டு மாணவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காசியாபாத்- 12-வது மாடி பால்கனி பகுதி இடிந்து விழுந்தது
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 12-வது மாடியில் இருந்து பால்கனி கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்தன. வைஷாலி பகுதியில் உள்ள தேவிகா அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இடிபாடுகள் விழுந்தபோது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved