Also Watch
Read this
By: Manigandan Raja

பாக்கெட் உணவுகளில் அதிக கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு இருந்தால்.
பாக்கெட் உணவுகளில் அதிக கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு இருந்தால், முன்புறத்தில் சிவப்பு எச்சரிக்கை லேபிள் ஒட்டும் திட்டத்தை FSSAI முன்மொழிந்துள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சத்துக்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால், ஹை ஃபேட், ஹை சுகர், ஹை சால்ட் என சிவப்பு அறுகோண குறியீடு இடம்பெறும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி நோக்கி சென்ற பயணிகள் பேருந்து விபத்து
உத்தரகாண்ட் மாநிலம் தேஹ்ரி கர்வால் பகுதியில், டெல்லி நோக்கி சென்ற பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் அருகே சாலையோரம் சென்ற 2 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை
சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையில் 520 கிலோ கஞ்சா, 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 3 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கஞ்சா ஒடிசாவிலிருந்து உத்தரபிரதேசத்துக்கு கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved