Also Watch
Read this
By: Web Team

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூலம் வெளியிடப்படும் வானிலை தகவல்களை இனி பொதுமக்கள் நேரடியாக பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வானிலை ஆய்வு மையத்திற்கு கேள்வி எழுப்பபட்டது. அதில், இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே மழையின் அளவு, மழையின் தீவிரம் மற்றும் வெப்பநிலைகளை அறியமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,வானிலை ஆய்வு மைய தகவல்களை அரசு அதிகாரிகள், பொதுமக்கள், செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் யாரும் நேரடியாக அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள், பேரிடர் காலங்களில் இதன் தாக்கம் வெளிபடும் என கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved