Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக போராட்டம் :
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து 14 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கடந்த ஜூன் 28 அன்று முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்த LPG டேங்கர் லாரி :
உத்தரப்பிரதேசத்தின் கவுசாம்பியில் உள்ள சோதனைச் சாவடி மீது மோதிய எல்.பி.ஜி. டேங்கர் லாரியிலிருந்து கேஸ் வெளியேறி தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கான்பூரில் இருந்து பிரதாப்கர் நோக்கி வேகமாக வந்த எல்பிஜி டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி பின்னர் அங்கிருந்த சுங்கசாவடி மீது மோதியதில், எரிவாயு கசிந்து தீப்பிடித்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி :

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர். இடைவிடாது பெய்த தென்மேற்குப் பருவமழையால் ஏற்பட்ட சம்பா, குல்லு, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், சாலைகள், பொதுக் கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.