தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ஐ சட்ட விரோதமாகவும், ஒருதலைபட்சமாகவும் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பாஜகவிற்கு ஞானேஷ் குமார் உதவியதற்கு இதுவே முக்கிய சான்று எனவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால், நாடாளுமன்ற சாலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெண் பத்திரிகையாளர்களிடம் போலீஸ் அத்துமீறல்?
டெல்லியில் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தின் போது பெண் பத்திரிகையாளர்களிடம் போலீசார் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.