Also Watch
Read this
By: Manigandan Raja

மோடியும் அமித்ஷாவும் தோற்காதது ஏன்?-ராகுல் கேள்வி
தேர்தலில் நாட்டின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடையும்போது பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் தோற்காதது ஏன்? என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குத் திருட்டை காங்கிரஸ் அம்பலப்படுத்திய அதே நேரத்தில்தான் தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை கடிதம் எழுதியுள்ளதாகவும், பிரதமர் மோடி நியமித்தவர்களே எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சில மாநிலங்களில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் நீடிப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 2024 தேர்தலுக்கு பின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிநாமா செய்யவேண்டும்
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 3 நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும், எஸ்.ஐ.ஆர். மற்றும் வரவிருக்கும் தேர்தல்களை நிறுத்த வேண்டும்.

2023-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டத்தை சிஜேபி நடத்தும் என அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved