சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு : நாடு தழுவிய அளவில் எல்பிஜி சிலிண்டருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், ரயில்கள் மற்றும் ரயில் நிலைய உணவு விடுதிகளில் உணவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. எனவே உணவு தயாரிக்க மைக்ரோவேவ் அடுப்புகள் மற்றும் இண்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்துமாறு உணவு வழங்கும் உரிமதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள உணவு மால்கள், சிற்றுண்டி விடுதிகள், மக்கள் உணவக நிலையங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியமில்லை என்றால் சமைத்த உணவை விநியோகிக்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு உணவுக்கான பணத்தை திருப்பித் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. Related Link எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீவிபத்து