Also Watch
Read this
By: Manigandan Raja

டெல்லியில் மாணவர்கள் விடுதி இடிந்து விழுந்து விபத்து
டெல்லியில் மாணவர் விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததை சுட்டிக்காட்டிய கரப்பான் பூச்சி ஜனதா தலைவர் அபிஜித் தீப்கே தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
பழங்குடியினர் பகுதியில் போதிய கவனிப்பும், ஆதரவும் இல்லாததால் மாணவர்கள் இறந்துக் கொண்டிருப்பதாகவும், பிரதமர் மோடி மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து, விபத்து குறித்து விளக்குவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவாவில் கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்த அமித்ஷா
டெல்லி சத்ய நிகேதனில் மாணவர் விடுதி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கோவா நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.

சிம்பெலில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், கோவா பயணத்தை ரத்து செய்து, டெல்லி மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் விடுதி கட்டடம் இடிந்து 5 மாணவர்கள் பலி
டெல்லியில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள பதிவில், கட்டடம் இடிந்து விழுந்த விபத்து மிகவும் வேதனை அளிப்பதாகவும், இந்த துயர சம்பவத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
டெல்லியில் 6 மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள சத்யா நிகேதன் பகுதியில் நேற்று மதியம் விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடம் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved