Also Watch
Read this
By: Manigandan Raja

கனிமங்களை ஆயுதமாக பயன்படுத்துவது முன்னேற்றத்தை பாதிக்கும்
AI மற்றும் முக்கிய கனிமவளங்களை ஆயுதமாக பயன்படுத்துவது கூட்டு முன்னேற்றத்தை பாதிக்க கூடும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் 2ஆம் நாளில் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச அளவில் வர்த்தகத்திற்கு உதவும் வினியோக கட்டமைப்பு பிரிக்ஸ் அமைப்பினால் வலுப்பெற்றுள்ளதாகவும், டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் உழவர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடியிடம் உதவி கோரிய அவரது பள்ளித் தோழர்
பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவரது பள்ளித் தோழர் தனது நிலத் தகராறு வழக்கில் CBI விசாரணையை கோரியுள்ளார். குஜராத்தின் மீரா ரோடைச் சேர்ந்த அஸ்கரலி வோஹ்ரவும், பிரதமர் மோடியும் வத்நகரில் உள்ள பி.என். பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 8ம் தேதி பிரதமரை சந்தித்து பேசியவர், பிரதமர் மோடியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மும்பையின் செம்பூர் பகுதியில், மஹுல் காவ்னிலிருந்து டிராம்பே நோக்கி இயக்கப்பட்ட எலக்ட்ரிக் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இருக்கைக்கு அடியில் இருந்து புகை வருவதைக் கவனித்து உடனடியாகப் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார்.

சோதனையிட்டபோது, பேருந்தின் பேட்டரி பாக்ஸிலிருந்து கிளம்பிய தீப்பொறிகளால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved