இளைஞர்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம்-சிஜேபி
- டெல்லியில் வரும் 10-ஆம் தேதி இளைஞர்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என CJP தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்
தெரிவித்துள்ளார்.
- வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
S.I.R. புகார் - தவறு நடந்திருந்தால் நடவடிக்கை நிச்சயம்

S.I.R. முறைகேடு புகாரில் தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பரிசீலித்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உறுதியளித்துள்ளது. சந்தேகங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், முடிவுகளை திரும்பப்பெற உத்தரவிட தயங்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- S.I.R முறைகேடு குற்றச்சாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. S.I.R பணிகள் குறித்து, 10 மாதங்களில் 14 முறை தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஞானேஷ்குமாரை பதவி நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரிய வழக்கை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. S.I.R. பணிகளில் இரண்டு தேர்தல் ஆணையர்களிடம் கலந்தாலோசிக்காமல் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.