news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கைதான சிறிது நேரத்திலேயே ராகுல், பிரியங்கா விடுவிப்பு
tv

Also Watch

கைதான சிறிது நேரத்திலேயே ராகுல், பிரியங்கா விடுவிப்பு

டெல்லி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல்

இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்களும் விடுவிக்கப்பட்டனர்

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதான ராகுல், பிரியங்கா மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டனர். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் டெல்லியில் நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சி எம்பிக்களை சந்திக்காதது ஏன்? - விளக்கம்

தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறைப்படி நேரம் கேட்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாலை 4 மணிக்கு பிறகு நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் சந்திக்க நேரம் கேட்ட எதிர்க்கட்சியின் கோரிக்கை வழக்கத்திற்கு மாறானது என்றும் இதனை ஏற்க முடியாது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழப்பம் ஏற்படுத்த ராகுல் நாடகம் - பாஜக விமர்சனம்

டெல்லியில் பேரணி, தர்ணா என ராகுல்காந்தி அரங்கேற்றியது நாடகம் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ஞானேஷ்குமாரை சந்திக்க நேரம் கேட்டதாக ராகுல்காந்தி சொல்வது பொய் என தேர்தல் ஆணைய அறிக்கையின் மூலம் அம்பலமானதாக பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved