news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தொடர்ந்து நிலைப்பாட்டை மாற்றும் ராகுல் காந்தி
tv

Also Watch

தொடர்ந்து நிலைப்பாட்டை மாற்றும் ராகுல் காந்தி

ஜே.பி.நட்டா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜே

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சனம் 

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என்றும், 15 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்குவதாகவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார். ஒவ்வொரு விவகாரம் குறித்தும் விவாதம் நடத்துவதே அரசின் நிலைப்பாடு என்று நட்டா விளக்கமளித்தார்.

இரவிலும் சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி 

JPSC -JSSC தேர்வு முறைகேடுகளை கண்டித்து இரவிலும் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட முயன்ற மாணவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

மாணவர்கள் மீதான தாக்குதல் - ராகுல் காந்தி கண்டனம் 

ஜார்க்கண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசியதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் ஜார்க்கண்ட் அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Related Link
சினிமா பாணியில் உடையணிந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சினிமா பாணியில் உடையணிந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு மனுபெற்ற MLA

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved