news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல், மல்லிகார்ஜுன கார்கே
tv

Also Watch

சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல், மல்லிகார்ஜுன கார்கே

2 வது ஆண்டாக புறக்கணித்தனர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மல்லிகார்ஜுன கார்கே

தொடர்ந்து 2ஆவது ஆண்டாக சுதந்திர தின விழாவை புறக்கணித்தனர்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தொடர்ந்து 2 வது ஆண்டாக புறக்கணித்தனர்.

நாட்டின் 80 ஆவது சுதந்திரதினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோர் பங்கேற்கவில்லை.

பதவிக்கு ஏற்ற இருக்கை ஏற்பாடுகள் அமைக்காததால் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. 2024-ஆம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவிலும், மத்திய அமைச்சர் அந்தஸ்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்குச் செங்கோட்டையில் ஐந்தாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைதான மேற்கு வங்க இளைஞர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது உறுதியானது. பெங்களூருவின் ஜிகானி ((Jigani)) பகுதியில் சந்தேகத்திற்கிடமான இணையச் செயல்பாடுகள் காரணமாக கடந்த 11 ம் தேதி சோதனை நடத்திய போலீசார், 25 வயதான மேற்கு வங்கத்த சேர்ந்த ஆசாஃபுல் மல்லிக் ((Asafool ​​Mallik)) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் கைதான மல்லிக் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த இம்ரான் ஹைதர் என்ற ஆப்கானிஸ்தான் நபருடன் பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் இந்தியாவுக்கு எதிராகப் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அவரிடம் பேஸ்புக் மூலம் பேசி, பயிற்சி பெறத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

Related Link
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவிற்கு உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவிற்கு உதவி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved