Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து, பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின்,தொலைபேசியில் விளக்கி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
எனது நண்பர், அதிபர் புதின் தொலைபேசியில் அழைத்துப் பேசியதற்கும், அலாஸ்காவில் அதிபர் டிரம்ப் உடனான தனது சந்திப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், இதுகுறித்து மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறது. வரும் நாட்களில் நாங்கள் தொடர்ந்து பேசி வருவோம் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved