news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews எல்.பி.ஜி சிலிண்டர்களில் எரிவாயு அளவை குறைத்து மோசடி
tv

Also Watch

எல்.பி.ஜி சிலிண்டர்களில் எரிவாயு அளவை குறைத்து மோசடி

மிஷன் நிகாரா

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gas

'மிஷன் நிகாரா' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கர்நாடகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் மேற்கொள்ளப்பட்ட தர ஆய்வில், 4 சிலிண்டர்களில் ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எரிவாயு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'மிஷன் நிகாரா' திட்டத்தின் கீழ் கர்நாடகா முழுவதும் உள்ள எல்பிஜி வாயு நிரப்பும் அலகுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் போது சுமார் 1,530 சிலிண்டர்களை எடை போட்டதில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் முதல் எஃகு பாலம் வெற்றிகரமாக அமைப்பு

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக மகாராஷ்டிராவில் முதல் எஃகுப் பாலம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. டைவ்-அஞ்சூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த எஃகு பாலம், ஆயிரத்து 405 மெட்ரிக் டன் எடையும் 100 மீட்டர் நீளமும் கொண்டுள்ளது.

திருச்சியில் உள்ள ஒரு பட்டறையில் தயாரிக்கப்பட்டு, சுமார் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் மூலம் மகாராஷ்டிராவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் மென்பொருள் கோளாறு

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் 'ஆட்டோ பைலட்' நிலையை செயலிழக்க வைக்கும் ஒரு புதிய மென்பொருள் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய 100 விமானங்கள் இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரையிறங்கும் முயற்சியின் போது விமானத்தின் திட்டமிடப்பட்ட உயரம் மற்றும் பாதையை விமானிகள் மாற்றினால் 'ஆட்டோ பைலட்' செயல்பாடு துண்டிக்கப்படக் கூடிய மென்பொருள் சிக்கலை Boeing கண்டறிந்துள்ளது.

Related Link
மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்

மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்

              
            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வார தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved