Also Watch
Read this
By: Manigandan Raja

உள்நாட்டில் தயாரிக்கும் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளுக்கு தர நிர்ணயத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நாட்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளை தயாரித்து வரும் நிலையில், அதற்கான தர நிர்ணயம் என்பது இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த சூழலில், உள்துறை அமைச்சகம் மற்றும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் கோரிக்கையின் பேரில் உருவாக்கப்பட்டுள்ள தரநிர்ணயம் ’ IS 19445 : 2025' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு இது பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved