news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இலங்கையின் ஆளும் ஜேவிபி பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை
tv

Also Watch

இலங்கையின் ஆளும் ஜேவிபி பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை

ஹர்ஷ் மல்ஹோத்ரா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜேவிபி பிரதிநிதிகள்

பா.ஜ.க.வின் அழைப்பின் பேரில் செப்.27 அன்று வந்த குழு

டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த இலங்கையின் ஆளும் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரை மாநில தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா வரவேற்றார்.

கடந்த 27ஆம் தேதி வந்த இக்குழுவினர் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் அழைப்பு விடுத்ததாக பாஜக தெரிவித்துள்ளது.

கல்லூரிக்கு முன்பாகவே மாணவர் சரமாரி குத்திக்கொலை

பெங்களூருவில் கல்லூரிக்கு முன்பாகவே சக மாணவர்களால் மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த யோகேஷை அவரது நண்பர் வெளியே வரும்படி அழைத்துள்ளார்.

அவர் வெளியே வந்தவுடன், அங்கு கூடியிருந்த இரு மாணவர் குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, கும்பலில் இருந்த ஒரு நபர் கத்தியை எடுத்து யோகேஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துணிக்கடை ஊழியரை சரமாரியாக வெளுத்து வாங்கிய பெண்

குஜராத்தில் பெண் ஒருவர் துணிக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனாகத் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சில பெண்கள் துணி வாங்க சென்றுள்ளனர்.

அப்போது, ஒரு பெண்ணிடம் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினரான மற்றொரு பெண், அந்த ஊழியரை பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்து வெளுத்துள்ளார்.

Related Link
2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலம்

2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved