Also Watch
Read this
By: Web Team

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை உயர்த்தி மேற்கு வங்க அரசு நிறைவேற்றிய சட்டமசோதாவுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டையே உலுக்கிய ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு மாநில அரசு இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருந்தது. அதன்படி, பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மசோதாவிற்கு ஆளுநர் ஆனந்த போஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கொந்தளித்துள்ள மமதா பேனர்ஜி, ஆளுநருக்கு எதிராக போராட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved