Also Watch
Read this
By: Web Team

சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையின்போது மஹாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தேவேந்திர புதாதா என்பவர் நாசிக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காணொலி வாயிலாக ராகுல் காந்தி ஆஜரானார். அப்போது, தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என ராகுல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்று 15 ஆயிரம் ரூபாய் பிணையில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved