உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காரில் இருந்த படியே மற்றொரு காரில் பயணித்த பெண்களை பார்த்து ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. 17 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் சிவப்பு நிற காரில் இருந்த இளைஞர், அருகில் சென்ற காரில் இருந்த பெண்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததோடு ஆபாசமான சைகைகளைச் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி, நாட்டில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில் இளைஞர் மற்றும் அவருடன் இருந்தவர் கைது செய்யப்பட்டனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. Related Link பைக் ஷோரூமுக்குள் புகுந்த காட்டெருமை