Also Watch
Read this
By: Manigandan Raja

உலகளவில் 7.8 சதவீத வளர்ச்சி
இந்தியாவின் முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருவதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
இந்தியா ஃபிரஜைல் 5 எனப்படும் பலவீனமான 5 நாடுகள் பட்டியலில் இருந்ததாகவும், தற்போது கொள்கை திறன் கொண்ட தேசமாகவும், உலகளவில் 7.8 சதவீத வளர்ச்சியுடன் வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் மாறியுள்ளதாக தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள்கள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு இன்று செல்கிறார். இன்று முதல் 9-ம் தேதி வரை அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது கல்வி, கலாசாரம், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மேற்கு பிராந்திய மாநில முதல்வர்களின் கூட்டம்
மேற்கு பிராந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக அவர் நேற்று கோவா சென்றடைந்தார்.

பனாஜி நகரில் நடைபெறும் கூட்டத்தில் கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், தாத்தரா- நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும், 2 மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved