Also Watch
Read this
By: Manigandan Raja

காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம்
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை திட்டம் பற்றி விவாதிக்க பெங்களூரு வரும்படி தமிழக முதல்வர் விஜய்க்கு, கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ள அழைப்பில், நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூருவில் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடக – தமிழக முதல்வர்கள் சந்தித்து பேச்சு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி சஸ்பெண்ட்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அளித்துள்ளது.
அதிருப்தி எம்.பி. மிதாலி பாக்கை கல்யாண் பானர்ஜி தரக்குறைவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொறுப்பேற்பில் இருந்து தப்பிக்கவும், அமைச்சரை காப்பாற்றவும் இரவெல்லாம் பணியாற்றும் பிரதமர், இன்னும் எத்தனை நாள் குறுக்குவழியை மட்டுமே தேர்வு செய்யப் போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நேர்வழியில் நடக்கும்படி மாணவர்கள் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved