Also Watch
Read this
By: Manigandan Raja

24 கேரட் தங்க ரேக் பூசப்பட்ட ராஜபோக கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இனிப்புக் கடையில், 24 கேரட் தங்க ரேக் பூசப்பட்ட ராஜபோக கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் கிலோ 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த ராஜபோக கொழுக்கட்டையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
ரேவந்த் ரெட்டி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved