news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மார்ச் 15ஆம் தேதி...

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இதுகுறித்து கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிக்கை;
ஒன்றிய பாஜக என்.டி.ஏ. அரசின் தவறான வெளியுறவு கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கும், வணிக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொது மக்கள் அவதியுற்று வருகின்றனர். உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது. சிறு, குறு தொழில்கள் உள்ள அதிக தொழில் வளம் மிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால், ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.

தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது
ஆனால், தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்கு உரியது. மேலும், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி, நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு உள்ளது. மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

ஏற்பாடுகளை செய்யுங்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ. அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் என்.டி.ஏ. அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாற்றம்
இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 16ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை;
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-03-2026 திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெறும். மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே தேதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போராட்டம் நடப்பதால் தற்போது தேதி மாற்றப்பட்டு உள்ளது.

Related Link
உழைப்பை  மட்டும் கொடுங்கள், உயிரை அல்ல - முதல்வர்

உழைப்பை மட்டும் கொடுங்கள், உயிரை அல்ல - முதல்வர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
6 hrs 46 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved