news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews அரசுபள்ளியில் ரீல்ஸ் - தவெக நிர்வாகியை நீக்கிய விஜய்
tv

Also Watch

tv

Read this

அரசுபள்ளியில் ரீல்ஸ் - தவெக நிர்வாகியை நீக்கிய விஜய்

விஜய் போட்ட ஒரு உத்தரவு

6

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk action

அரசு தொடக்கப்பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்தது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு அந்த பகுதியை சார்ந்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ், கட்சி தொண்டர்களுடன் சென்றுள்ளனர். வகுப்பறைக்குள் முதலமைச்சர் விஜயின் படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா, இவர்தான் முதல்வர் உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன் என்று பேசியதுடன், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போன்று ரீல்ஸ் எடுத்து பதிவிட்டுள்ளார்.

தவெக நிர்வாகி பகிர்ந்த ரீல்ஸ் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தவெகவினரின் இதுபோன்ற செயல்களை முதலமைச்சர் விஜய் ஏற்கமாட்டார் என கூறி கண்டனத்தை பதிவிட்டிருந்தார். மேலும் அதிமுக தலைமைக் கழகமும், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் தவெக நிர்வாகியின் செயல்களை கண்டித்து அறிக்கை வாயிலாக கண்டனங்களை தெரிவித்தனர். 

இந்த நிலையில் அரசு பள்ளியில் முதலமைச்சர் விஜய்யின் படத்தை மாட்டி ரீல்ஸ் வெளியிட்ட உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மீது அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ராஜேஷை தவெக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் ரீல்ஸ் எடுத்ததால் கட்சி நிர்வாகியை தவெகவில் இருந்து நீக்கிய சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
தனியார் மயமாகும் தூய்மை பணி ? - அதிர்ச்சியில் ஊழியர்கள்

தனியார் மயமாகும் தூய்மை பணி ? - அதிர்ச்சியில் ஊழியர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகிக்கு 74 கசையடிகள் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு

6
18 mins agoshare
iran singer1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved