Also Watch
Read this

தூய்மை பணியை தனியார் மையம் ஆகினால் இத்தனை நாட்கள் பணி செய்த தங்களுடைய நிலைதான் என்ன ? என தூய்மைப்பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட மனக்குமுறலில், “ நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் ஏராளமானோர் பணி செய்து வரும் நிலையில் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனமாக இருக்கக்கூடிய அவர்லாந்து நிறுவனத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணி செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஊதியம் குறித்த நேரத்தில் வருவதில்லை. 15ஆம் தேதிக்கு மேல தான் வருகிறது. முதலில் காலை 6 மணி முதல் 2 மணி வரை பணி நேரம் என்று சொன்னவர்கள் தற்போது பிற்பகல் 3 மணி வரை பணி செய்ய சொல்கிறார்கள்.
குப்பை கழிவுகளை எடுத்துக்கொண்டு அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் பகுதிக்கு கொண்டு சென்றால் அங்கே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கக் கூடிய ஒரு நிலை உள்ளது. இந்த நிலையில் தூய்மை பணியை தனியார் மையமாகினால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. தூய்மை பணியை தனியார் மயமானால் எங்களைப் போன்ற ஒப்பந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும், இந்த நிலை வராமல் இருக்க தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved