Also Watch
Read this
By: Manigandan Raja

பாலத்தின் கீழே உள்ள சாலையில் கவிழ்ந்த பெட்டிகள் :
ஜெர்மனியின் முனீக் நகரில் 2 சரக்கு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.முனீக் நகரின் ஒரு பாலத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில்,16 அடி நீளம் கொண்ட இரு பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகள் பாலத்தில் கீழே உள்ள சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.
பலியானவர் உடலை மீட்டதோடு, ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கண்டனம் :

சர்வதேச அளவில் மிக முக்கியக் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வகையான கப்பல் போக்குவரத்திற்கும் மூடுவதாக ஈரானின் 'கத்தாம் அல்-அன்பியா' மத்திய தலைமையகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களின் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் :

Gaza (Courtesy: Reuters)
காசாவில் இஸ்ரேலியத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்ததாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து மத்திய காசா முனையில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் நடத்திய வான்வழித் தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ட் லகியா நகரில் இஸ்ரேலியப் படைகள் சுட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், கான் யூனிஸில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved