news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்குள் அதனை கடந்த கப்பல்கள்
tv

Also Watch

tv

Read this

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்குள் அதனை கடந்த கப்பல்கள்

ஹார்முஸ் ஜலசந்தி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சரக்கு கப்பல்கள்

3 சரக்கு கப்பல்கள் இந்தியா நோக்கி பயணம் :

ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய நிலையிலும், கச்சா எண்ணெயை ஏற்றிய 3 சரக்கு கப்பல்கள் இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

94 இந்தியப் பணியாளர்களுடன் 8.6 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து விட்டதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

3 கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி :

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மூன்று புதிய கப்பல்கள் இன்று கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, INS Dunagiri, INS Sanshodhak மற்றும் INS Agray ஆகியவற்றை நாட்டுக்கு கடற்படை சேவைக்காக அர்பணிக்கிறார்.

ஒரே நாளில் மூன்று உள்நாட்டு கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய கடற்படை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

12வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி :

உலகம் முழுவதும் இன்று 12வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற பொருளில் இந்த ஆண்டு யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்ய இருக்கிறார். இதே நேரத்தில் பல இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அனைவரும் யோகாசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக yoga.ayush.gov.in என்ற இணையதளத்தில் தங்களது யோகா சங்கம் நிகழ்வுகளைப் பதிவு செய்யுமாறு ஆயுஷ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Link
சாலையில் நடந்து சென்ற தொழிலாளரிடம் செல்போன் பறிப்பு

சாலையில் நடந்து சென்ற தொழிலாளரிடம் செல்போன் பறிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா வாயு கசிவு.. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

0
0 min agoshare
Ammoniabutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved