news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews சாலையில் நடந்து சென்ற தொழிலாளரிடம் செல்போன் பறிப்பு
tv

Also Watch

tv

Read this

சாலையில் நடந்து சென்ற தொழிலாளரிடம் செல்போன் பறிப்பு

பெங்களூரு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செல்போன் பறிப்பு

சாலையில் நடந்து சென்ற தொழிலாளரிடம் செல்போன் பறிப்பு :

பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கப்பன்பேட்டை 14-வது கிராசில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில், அந்த ஊழியர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர். பின்னர் அதே ஸ்கூட்டரில் அங்கிருந்து தப்பித்து செல்ல வேகமாக சென்றனர்.

செல்போனை பறிகொடுத்த ஊழியர், திருடன்... திருடன்... எனக்கூறியபடி வாலிபர்கள் சென்ற ஸ்கூட்டரை விரட்டியபடி ஓடி வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சாக்கு மூட்டையில் சரக்குகளை தூக்கி கொண்டு நடந்து வந்த தொழிலாளி, வாலிபர்கள் தப்பி சென்ற ஸ்கூட்டரின் முன் டயர் மீது மூட்டை தூக்கி வீசினார்.

செல்போனை வீசிவிட்டும், ஸ்கூட்டரை இதில் ஸ்கூட்டர் கவிழ்ந்து விழுந்தது. உடனே எடுக்காமலும் 2 வாலிபர்களும் ஓடினார்கள். அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது திடீரென்று ஒரு வாலிபர் அங்குள்ள நடைபாதையில் சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்து தப்பி ஓடிய அவரது கூட்டாளி நண்பரை தூக்கிவிட ஓடிவந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அதே நேரத்தில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த வாலிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் கூறினர். அத்துடன் பொதுமக்களிடம் சிக்கிய வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், மாரடைப்பால் உயிரிழந்தவர் பெயர் ஜூனைத் என்றும், கைதான கூட்டாளி அர்பாஜ் என்றும் தெரிந்தது. மேலும் ஏற்கனவே ஜூனைத் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது
தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த இளைஞர் பலி :

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனது வருங்கால மனைவியுடன் மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த இளைஞர் 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஹுஞ்சே (Gahunje) பகுதியைச் சேர்ந்த கேதன் விஷால் அகர்வால் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் இரண்டு நண்பர்களுடன் லோகாட் கோட்டைக்குச் சென்றார். அப்போது, மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யுஜி 2026 மறுதேர்வு :

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யுஜி 2026 மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மே மாதம் நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மறுதேர்வு நடத்தப்படுகிறது.

சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

Related Link
ஜொமேட்டோ டெலிவரி செய்தால் ரூ.1 லட்சம் சம்பளம்

ஜொமேட்டோ டெலிவரி செய்தால் ரூ.1 லட்சம் சம்பளம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகி.. PUNISHMENT கொடுத்த CM விஜய்

1
7 mins agoshare
CM Punishmentbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved