Also Watch
Read this
By: Manigandan Raja

ஹிஸ்புல்லா அமைப்பு வீசிய எறிகணைகளுக்கு பதிலடி :
ஹிஸ்புல்லாவுடன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இரவோடு இரவாக வீசிய எறிகணைகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா 50-க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இத்தாலி பிரதமர் மீண்டும் பதிலடி :

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் மெலோனி, இத்தாலியில் தனது பிரபலத்தை அதிகரிப்பதற்காகத் தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளதற்கு அவர் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மெலோனி, தங்களுக்கு நண்பராக இருந்தது தனது செல்வாக்கை உயர்த்தவதற்கு ஏதும் பயன்படவில்லை என்றும்,தனது செல்வாக்கு என்பது இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் எனது திறனைப் பொறுத்ததே எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved