Also Watch
Read this

பிரியங்க சோப்ரா, தீபிகா படுகோனே, கரீனா கபூர் உள்ளிட்ட நடிகைகளின் கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க இதுதான் காராணம் என சொல்லப்படுகிறது.
நடிகைகள் தங்களது உடல் பராமரிப்பில் அதீத அக்கறை காட்டுவார்கள். சருமத்துக்கு எவ்வளவு அக்கறையோ அதேபோல் முடிக்கும் அவர்களின் பராமரிப்பு இருக்கும். அந்த வகையில், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க கோல்டு பிரஸ்டு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடியின் வேர் பலமாகி கூந்தல் அடர்த்தியை தருமாம்.
கரீனா கபூர், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகிய நான்கையும் சம அளவில் கலந்து மசாய் செய்தபடி தலைக்கு பயன்படுத்துவதால் அது வேர்வரை நன்றாக ஊறி கூந்தலின் அடர்த்தியையும் பளபளப்பையும் தருகிறதாம்.
இதேபோல் அனுஷ்கா சர்மா, கூந்தலுக்கு விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறார் என சொல்லப்படுகிறது. விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கிறதாம்.
இதுமட்டுமில்லாமல் தேங்காய் எண்ணெய்யில் வெங்காயம், கறிவேப்பிலை, நெல்லிக்காய், வெந்தயம் கலந்து மிதமான சூட்டில் காய்ச்சி பயன்படுத்துவதால் வேர்கள் பலமடையும் எனவும் தகவல் வெளியாகி இருக்கு. ஆலியா பட், ஆர்கன் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் அவரது கூந்தல் மென்மையாக இருப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved