Also Watch
Read this
By: Manigandan Raja

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர்.
பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமநாதசாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை வரிசையில் சென்று சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்
மேலும் கூட்டநெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்ற செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நான்கு ரத வீதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved